இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் வைத்து சந்தித்து உரையாடியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனும் பங்கேற்றிருந்தார்.
“இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தையாளராக எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வழங்கிய பங்களிப்பை மஹிந்த ராஜபக்ஷ நினைவு கூர்ந்தார் மற்றும் மோதலினால் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கங்கள் குறித்து இவ்விருவரும் கலந்துரையாடினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சர்வதேச காலநிலை ஆலோசகர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்தமைக்கும் சொல்ஹெய்முக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
#SriLankaNews