இலங்கை ஆண்களுக்கு ஜப்பானில் நிர்மாணத் துறையில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
இதற்காக 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி மாலை 04.30 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், இதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் titp@slbfe.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்குகுறிப்பிட்ட தினத்திற்கு முன் அனுப்பி வைக்க வேண்டும்.
#SriLankaNews