இலங்கைக்கு வெற்றியை பரிசளித்த சமரி அத்தபத்து! தாயார் வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான பதிவு
“எனது மகள் இப்படி ஒரு போட்டியில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது” என்று இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவி சமரி அத்தபத்து தயார் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”எனது கணவர் இறந்த பிறகு சமரிக்கு எல்லாவற்றிலும் நான் உதவி செய்தேன்.
அவள் வீட்டில் தனியாக இருப்பாள் என்று நினைக்கவில்லை. அப்பா போய்விட்டார் என்று நினைக்கவில்லை. அவளை அவள் விருப்பத்துக்கு அனுமதித்தேன். இன்றும் அப்படிததான். அதனால் தான் சமரி இன்று வெற்றியை பரிசளித்துள்ளார்” என சமரியின் தாய் கூறியுள்ளார்.
இதேவேளை கிரிக்கெட் மூலம் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவி சமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.
தோல்விகளால் சோர்ந்து போன இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க முடிந்ததில் தானும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியும் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.
ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்தது தனக்கும் அணிக்கும் மிகப்பெரிய பலமாக அமைந்தது.
என்னால் கிண்ணத்தை எனது நாட்டிற்கு கொண்டு வர முடிந்தது. வெகு தொலைவில் இருந்து மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் போட்டியை பார்க்க வந்ததாக நினைக்கிறேன்.” என சமரி கூறியுள்ளார்.
- breaking news
- breaking news sri lanka
- cricket sri lanka
- english news
- Featured
- hiru news
- news from sri lanka
- news in sri lanka today
- news sri lanka
- newsfirst sri lanka
- sirasa news
- sri lanka
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news live
- sri lanka news sinhala
- sri lanka news tamil
- sri lanka news today
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news today 2023
- sri lanka trending
- tamil lanka news
- tamil sri lanka news
- tv news