” நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.” – என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
போராட்டக்காரர்களை ஒடுக்கவே அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் இன்று நிராகரித்தார்.
புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதில் தனக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும், நாட்டுக்காக தியாக உணர்வுடன் பணியாற்ற அனைவரும் ஒன்றியைண வேண்டும் எனவும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
#SriLankaNews

