அவசரகால சட்டம்! – வாக்களிப்பு மூலம் தீர்மானிக்கலாம் என்கிறார் சுமந்திரன்

sumanthiran 1

அவசரகால சட்டம் தொடர்பில் நாளை தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று சபையில் வலியுறுத்தினார்.

” அவசரகால சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இங்குள்ளது. நாடாளுமன்றம் கூடும் முதல் சந்தர்ப்பத்திலேயே அது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஆனால் இங்கு அதிகாரம் மீறப்பட்டுள்ளது. எனவே ,இது தொடர்பில் நாளை தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை நிறுத்திகூட இது தொடர்பில் வாக்கெடுப்பை நடத்தலாம்.” – என்றும் சுமந்திரன் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version