அம்மன் ஆலயத்தில் யானைகள் அட்டகாசம்!!

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று (31) நள்ளிரவில் புகுந்த ஐந்து யானைகள் அங்கு பாரிய சேதத்தை விளைவித்துள்ளன.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சுமார் 5 யானைகள் ஆலய சுற்றுமதிலை  உடைத்துக் கொண்டு  அங்கிருந்த அலுவலக அறை, களஞ்சியசாலை என்பவற்றை முற்றாக உடைத்து சேதப்படுத்தின.

களஞ்சியசாலையில் உள்ளிருந்த அரிசியை எடுத்ததுடன், நான்கு பக்கங்களிலும் தும்பிக்கையால் உடைத்து சேதப்படுத்தின.

அருகில் இருந்த பாரிய மாமரத்தின் கிளையை முறித்து எறிந்து சுமார் ஒரு மணி நேரம் அட்டகாசம் செய்தன.

அச்சமயம் அங்கிருந்த காவலாளி எதுவும் செய்ய முடியாத நிலையில் அச்சத்தில் இருந்துள்ளதாக ஆலய தலைவர் கி.ஜெயசிறில் கூறினார் .

image e76269267d

#SriLankaNews

Exit mobile version