இலங்கையில் நடந்த மிக அரிய யானை சண்டை
மிஹிந்தலை பிரதேசத்தில் மிக அரிய யானை சண்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.
மிஹிந்தலை – மஹகனதராவ குளம் காட்டுப்பகுதிக்கு அண்மித்த பொத்தானை பிரதேசத்தில் நேற்று யானைகள் 2 கடும் சண்டையில் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சண்டை நீடித்ததாக மக்கள் தெரிவித்தனர்.
இந்தச் சண்டையினால் அண்மைய பிரதேசம் முழுவதும் புழுதியால் மூடப்பட்டுள்ளதாக மிஹிந்தலையின் பாரம்பரிய உள்ளூர் வைத்தியர் சோமரத்ன தெரிவித்துள்ளார்.
யானைகள் 2 சண்டையிடும் காட்சி மிகவும் அரிதாகவே ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment