தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதியமைச்சர் இதன்போது அமைச்சரவைக்கு உறுதியளித்துள்ளார்.
#SriLankaNews