இலங்கை மின்சார சபை தலைவரின் இராஜினாமாக் கடிதத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பேர்டினாண்டோ, பெப்ரவரி முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக நேற்று அறிவித்தார். இது தொடர்பில் இராஜினாமாக் கடிதத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையிலேயே அவரின் இராஜினாமாக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews