மின் கட்டணம் குறைகிறது!

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி மின்சாரக் கட்டணத்தை உடனடியாக முப்பது வீதத்தால் குறைக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் தெரிவித்தார்.

எனினும், எரிபொருள் விலைக் குறைப்பின் அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் மேற்கொள்ளும் கொள்கை முடிவுகளுக்கு அமைய மின்சார பாவனையாளர்களுக்கு எந்தவொரு நிவாரணத்தையும் வழங்க ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும், தயாரிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஆணைக்குழுவின் நிலைப்பாடு குறித்து நாட்டுக்கு அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் விலை குறைப்பு, கடந்த காலங்களில் மின்சார உற்பத்தி செலவு ஆகியவற்றை கணக்கில் எடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

#srilankaNews

Exit mobile version