புதிய மின்சார விலைச்சூத்திரத்தின் படி, முதல் 30 யுனிட்டுக்களுக்கான கட்டணம் ஒரு யுனிட்டுக்கு 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
அதன்படி, முதல் 30 யுனிட்களுக்கு, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நிலையான கட்டணமாக 1,500 ரூபாயும், மற்றும் கட்டணமாக 3,000 ரூபா அறவிடப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித நேற்று தெரிவித்தார்.
“மின் கட்டண திருத்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதல் யுனிட் 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகிறது.
1,500 நிலையான கட்டணங்கள். அதாவது 30 யுனிட் பயன்படுத்துபவர் 3,000 ரூபா செலுத்த வேண்டும். மின் கட்டணம் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இது கறுப்புச் சந்தையைத் தாண்டிய விலை உயர்வு. மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நோக்கத்தில் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது – என்றார்.
#SriLankaNews