தேர்தல் விவகாரம் – பிரதமரை சந்திக்கிறது ஆணைக்குழு .

election

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவை சந்திப்பதற்கு  தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ​எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இங்கு அதிக கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவை அழைத்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version