பொதுத் தேர்தலை நான்கு மாதங்களுக்கு பிறகே நடத்தக் கூடியதாக இருக்கும் எனவும், தேர்தல் செலவு ஆயிரம் கோடி ரூபாவையும் தாண்டும் எனவும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“உடனடியாக பொதுத்தேர்தலை நடத்த முடியாது. சகல அவசதிகளும் செய்து கொடுக்கப்பட்டாலும் நான்கு மாதங்களாவது கட்டாயம் தேவை. தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய சூழல் பொருத்தமானதாக அல்ல. வேட்பாளர்களுக்கு மக்கள் முன் செல்ல முடியுமா என்றுகூட தெரியவில்லை.
அத்துடன், கடதாசி உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதால் தேர்தலை நடத்துவதற்கு ஆயிரம் கோடி ரூபாவை விடவும் அதிக நிதி தேவைப்படும்.” – என்றார்.
#SriLankaNews