9
இலங்கைசெய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வாய்ப்பு: பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவுறுத்தல்…!

Share

தேர்தல் ஆணைக்குழுவில்(Election Commission) தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வட்சப்(Whatsapp)ஊடாக போலித் தகவல்கள் பகிரப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறு தொழில் வாய்ப்பை வழங்குதல், வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் எந்த ஒரு அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர். ஏ. எம். எல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

அத்துடன், வட்சப் ஊடாக பரவும் போலி தகவல் தொடர்பில் ஆராய்வதற்காக காவல்துறை கணினி குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டு பரப்படும் லிங்குகளுக்குள் பிரவேசிக்கவோ, அவற்றை பகிரவோ வேண்டாமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...