எரிவாயு தட்டுப்பாடு – மயங்கி விழுந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதி!

Gas 5

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி வீழ்ந்துள்ள சம்பவம் இன்று தெஹிவளையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த முதியவர் எரிவாயு சிலிண்டர்கள் மீது மயங்கி விழுந்துள்ள நிலையில், சம்பவ இடத்தில் நின்ற பொலிஸாரால், அவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை முதல் தெஹிவளை எரிவாயு விற்பனை நிலையத்தில் எரிவாயு பெற்றுக்கொள்ள வந்த மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்ட நிலையில், வரிசையில் நீண்டநேரம் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்ததுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version