15 மில்லியன் முட்டைகள் நாட்டிற்கு

tamilni 280

15 மில்லியன் முட்டைகள் நாட்டிற்கு

பண்டிகை காலத்துக்கு தேவையான 15 மில்லியன் முட்டைகளை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் நாளை (17.12.2023) நாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை சதொச நிறுவனத்திற்கு 10 மில்லியன் முட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு தரம் உறுதி செய்யப்பட்டுள்ள முட்டைகளே இவ்வாறு வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் குறித்த முட்டைகள் சந்தைக்கு வெளியிடப்படும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version