நாட்டில் வரையறுக்கப்பட்டுள்ள முட்டை இறக்குமதி

24 6604e2a54f238

நாட்டில் வரையறுக்கப்பட்டுள்ள முட்டை இறக்குமதி

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வது வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சுமார் 4 முதல் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பில் உள்ளதாகவும் இலங்கை அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் ஐந்து இலட்சம் முட்டைகள் சதொச நிறுவனங்கள் ஊடாக விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை 43 ரூபா எனவும், போதியளவு முட்டை கையிருப்பு இருப்பதனால் இறக்குமதி வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version