கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு பொருளாதார நிபுணர்கள் வழங்கிய தவறான ஆலோசனையினாலேயே பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது.
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட சபை உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், கோட்டாபய ராஜபக்ச நல்லெண்ண அடிப்படையில் மக்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கியதாகவும் ஆனால் அது மோசமான பக்கமாக மாறிவிட்டது எனவும் குறிப்பிட்டார்.
#srilankanews