” பொருளாதார போரை ஆயுதத்தால் வெற்றிகொள்ள முடியாது. முறையான திட்டமிடலும், உரிய தீர்மானமுமே அதற்கு முக்கியம். இதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்த சஜித் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” உரிய முகாமைத்துவம் ஊடாக வரிசை யுகத்துக்கு முடிவுகட்டப்படும். நாட்டுக்காகவே இன்று இளைஞர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். அரச பயங்கரவாதத்தை அவர்கள் எதிர்க்கின்றனர். எனவே, போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசு முற்படக்கூடாது.
தற்போதைய சூழ்நிலையிலும் இராணுவத்தினரை வைத்து அரசு பிரச்சாரம் செய்கின்றது. ஆனால் அன்று பொன்சேகாவை தற்போதைய ஆட்சியாளர்கள் எப்படி நடத்தினார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
நாம் மக்கள் பக்கமே நிற்கின்றோம். எமக்கு பதவிகள் முக்கியமில்லை. அரசியல் டீலுக்கும் தயார் இல்லை. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்படும்.” – என்றார்.
#SriLankaNews