வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் - IMF பச்சை கொடி
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் – IMF பச்சை கொடி

Share

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் – IMF பச்சை கொடி

இலங்கைக்கு இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஒரு தொகுதி பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மோட்டார் வாகனங்கள் தவிர்ந்த அனைத்து பொருட்களையும் செப்டம்பர் முதல் வாரத்தில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகள் தொடர்பில் வாரந்தோறும் மீளாய்வு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், 286 பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் உட்பட 930 பொருட்களின் இறக்குமதிக்கான தற்காலிக தடை நீடிக்கிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 500 பொருட்கள் தடை செய்யப்பட்ட இறக்குமதிப் பிரிவில் இருந்தன, அவற்றில் 250 இறக்குமதித் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய, இரண்டு கட்டங்களாக இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பொருட்களை எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்திற்குள் நீக்குவதற்கு இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், வாகன இறக்குமதி தடை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன், மூலோபாய திட்டத்தின்படி விலக்கு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக, மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...

images 6 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வடகிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்;  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

தமிழ் மக்களுக்கு முக்கியமான கார்த்திகை மாதத்தில் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்...