உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்
அரசியல்இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்: 2 குண்டுதாரிகளின் தந்தைக்கு பிணை!

Share

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல வர்த்தகர் மொஹமட் இப்ராஹிமுக்கும் மற்றுமொருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கி இன்று உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் இருவரும் தலா 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வௌிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளார்.

அத்துடன், மாதாந்தம் முதலாவது ஞாயிறுக்கிழமை சந்தேகநபர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் சுமார் 3 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் உடல்நிலை உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு நீதிபதி பிணை வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரிகளான மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகியோரின் தந்தையே பிரபல வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம் என்பவர்.

தாக்குதல் நடத்தப்படவுள்ளது எனத் தகவல் அறிந்தும், அதனைப் பொலிஸாருக்குத் தெரிவிக்காது மறைத்த குற்றச்சாட்டில் பிரபல வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...