ஈஸ்டர் தாக்குதல் – கர்த்தலினால் மனு பரிசீலனைக்கு!

kar

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த ரிட் மனுவை மே 9ஆம் திகதியன்று பரிசீலிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், திங்கட்கிழமை (27) தீர்மானித்தது.

குறித்த மனு, சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது,  சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன மற்றும் மனுதாரரின் சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பரிசீலனைக்கான திகதியை நிர்ணயித்தது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத பொலிஸ் அதிகாரிகள் குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள போதும் அவை அமுல்படுத்தப்படவில்லை என்றும் அவற்றை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறும் கோரியே மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version