tamilni 177 scaled
இலங்கைசெய்திகள்

பிள்ளையான் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க முடியாது

Share

பிள்ளையான் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க முடியாது

போலியான கருத்துக்களை வெளியிட்டு பிள்ளையான் போன்றவர்கள் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் செயலாளராக இருந்த அசாத் மௌலானா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்தினால் மக்கள் பல்வேறு சந்தேகங்களுடன் இப்போது இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

அம்பாறை – கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (11.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர்,

”சஹ்ரானின் சகோதரருடன் தொடர்புள்ள பிள்ளையான் தன்னை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் சமூகத்தை மீண்டும் பயங்கரவாத முத்திரை குத்துவதை நிறுத்த வேண்டும்.

சஹ்ரானின் சகோதரருடன் தொடர்புள்ளதை பல இடங்களில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ள நிலையில் அவர் தன்னை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து மீண்டும் மீண்டும் பயங்கரவாத முத்திரை குத்துவதை நிறுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தற்போது முஸ்லீம் மக்கள் மீது சிலர் சுயநலத்திற்காக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது எம்மால் ஏற்க முடியாது.

நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆட்சி மாற்றத்தை இலக்குவைத்து நடத்தப்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....