tamilni 371 scaled
இலங்கைசெய்திகள்

சிறையில் அடைக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கும் பொன்சேகா

Share

சிறையில் அடைக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கும் பொன்சேகா

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு யார் முக்கிய சூத்திரதாரி என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சூத்திரதாரிகளையும், கடமைகளை தவறவிட்டவர்களையும் நிச்சயம் சிறைக்கு அனுப்புவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய பாதுகாப்புடன் பொருளாதாரம், சுகாதாரம், உணவு பாதுகாப்பு தொடர்புப்பட்டதாக ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். நாட்டின் ஒருமைப்பாடு, ஆட்புல எல்லை, பொருளாதாரம், வெளிநாட்டு உறவு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்புப்பட்டுள்ளன.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டன. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தமது குறுகிய தேவைகளுக்காக தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தின. இதன் பெறுபேறும் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது.

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு துறையில் முப்படைகள்,பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுக்கு 423 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை காட்டிலும் இம்முறை 12 பில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இராணுவத்துக்கு 218 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வாழ்க்கை செலவுகள் உயர்வடைந்துள்ள பின்னணியில் இம்முறை பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்குவது அவசியமற்றது என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். பொருளாதார பாதிப்பு என்பதற்காக வீட்டுக்கு ஜன்னல் மற்றும் கதவுகளை பொருத்தாமல் இருக்க முடியாது.

தேசிய பாதுகாப்புக்கு வருடாந்தம் இந்தியா 81 பில்லியன் டொலர், பாக்கிஸ்தான் 10.3 பில்லியன் டொலர், பங்களாதேஸ் 5.பில்லியன் டொலi, நேபாளம்0.4 பில்லியன், இலங்கை 1.1 பில்லியன் டொலர், மலேசியா 3.4 பில்லியன் டொலர், இந்தோனேசியா 9.1 பில்லியன் டொலர், சீனா 292 பில்லியன் டொலர், தாய்லாந்து 5.7 பில்லியன் டொலர், தென்கொரியா 46.பில்லியன் டொலர், ஜப்பான் 46 பில்லியன் டொலர் ஒதுக்குகின்றன.

இலங்கையும், நேபாளும் மாத்திரமே 1 சதவீதத்துக்கு இடைப்பட்ட அளவில் நிதி ஒதுக்குகின்றன. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நேபாளத்தை காட்டிலும் குறைவான அளவு நிதியை தேசிய பாதுகாப்புக்கு ஒதுக்க முடியாது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இராணுவத்தினரது எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளது. இறுதி கட்ட யுத்தத்தின் போது 2 இலட்சமாக காணப்பட்ட இராணுவத்தினரது எண்ணிக்கை தற்போது 153000 ஆக காணப்படுகிறது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இராணுவத்தினரது எண்ணிக்கையை 1 இலட்சமாக குறைப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. இது ஒருபோதும் சாத்தியமடையாது.

நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் இராணுவத்துக்கு ஆயுதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் பயன்படுத்த முடியாத யுத்த தாங்கிகளே இராணுவத்திடம் உள்ளன. விமானப்படையிடம் ஒரு ஜெட் விமானம் மாத்திரமே உள்ளது.

ஆகவே இம்முறை புதிய ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து பேசப்படுகிறது. தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தினருக்கும்,ஏனைய மக்களுக்கும் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை.

குண்டுத்தாக்குதலுக்கு யார் முக்கிய சூத்திரதாரி என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சூத்திரதாரிகளையும், கடமைகளை தவறவிட்டவர்களையும் நிச்சயம் சிறைக்கு அனுப்புவேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...