மாலைதீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

tamilni 103

மாலைதீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன.

குறித்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

மாலைதீவின் தலைநகரான மாலேயில் இருந்து மேற்கே 896 கிலோமீற்றர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில், ஜப்பானில் கடந்த முதலாம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.

மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version