கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள்

tamilni 406

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள்

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் இந்த வர்த்தக நிலையங்களின் நடவடிக்கைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டது.

அதற்கு முன்னதாக, சிங்கப்பூர் மற்றும் கொழும்புதுறைமுக நகரத்திற்கு சொந்தமான வன் கோல்ட் டியுட்டி ப்ரீ நிறுவனம், வரியில்லா கடைகளை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதேவேளை, கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு துறைமுக நகரை இணைக்கும் விமானப் பாதை என்பன எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திறக்கப்படவுள்ளன.

Exit mobile version