இரட்டைக் குடியுரிமைதாரர் உயர் பதவிகளை வகிக்க தடை! – திருத்தம் விரைவில்?

Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1

இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் இலங்கையில் உயர் பதவிகளை வகிப்பதற்கு தடை விதிக்ககோரும் அரசமைப்பு திருத்தம் அடுத்த மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

தனிநபர் சட்டமூலமாகவே இதற்கான யோசனை முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது 22ஆவது அரசமைப்பு திருத்தமாக கருத்தில் கொள்ளப்படும்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு நீதிபதிகள், தூதுவர்கள் மற்றும் அரச நிர்வாக சேவையில் உயர் பதவிகளை வகிக்க முடியாது.

அத்துடன், நாடாளுமன்றம் வரமுடியாது. தேர்தல்களில் போட்டியிடவும் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Exit mobile version