ஹரக் கட்டா தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் தகவல்

rtjy 49

ஹரக் கட்டா தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் தகவல்

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என்ற பிரபல குற்றவாளியான நடுன் சிந்தக விக்கிரமரத்ன தாம் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க 700 மில்லியன் ரூபா வழங்க முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நிகழ்வு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தன்னை அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்காக பாதாள உலக பிரமுகர்கள் தனது சிரேஸ்ட அதிகாரிகளுக்கு இன்னும் பெரிய தொகை பணத்தை கொடுக்க அவர் தயாராக இருப்பதாக அமைச்சர் அலஸ் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவுவதும் குற்றச் செயல்கள் கணிசமான அளவு அதிகரிப்பதற்கு காரணமாக அமைவதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version