நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் தற்போது நடைமுறையில் உள்ள கடுமையான பாதுகாப்பு வசதிகள் காரணமாக, கடத்தல்காரர்கள் இந்திய-இலங்கை கப்பல் சேவை மூலம் போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு சம்பவமாக, அதிகாரிகள் 41.2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒரு பெரிய குஷ் கடத்தலை நேற்று முறியடித்துள்ளனர்.
தென்னிந்திய பயணி ஒருவர் தாம் கொண்டு வந்த பொருட்களுடன் மறைத்து வைத்திருந்த நான்கு கிலோவுக்கும் அதிகமான கஞ்சா வகை ‘குஷ்’ போதைப்பொருளை, இலங்கை சுங்க அதிகாரிகள் மீட்ட சம்பவம், காங்கேசன்துறை துறைமுகத்தில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ‘சிவகங்கை’ படகில் ஏறிய 33 வயதுடைய இந்த நபர் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.