ரணிலிற்கு பறந்த அவசர கடிதம்
இலங்கைசெய்திகள்

ரணிலிற்கு பறந்த அவசர கடிதம்

Share

ரணிலிற்கு பறந்த அவசர கடிதம்

மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் செயற்பாடுகள் தற்போது முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் தலையிடுமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (28.06.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில் “மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் செயற்பாடுகள் தற்போது முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நாங்கள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளோம். பல வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை.

இதனால் தரம் குறைந்த மருந்துகள் முறையான மதிப்பீடு இன்றி நாட்டுக்கு வருவதை அவதானிக்க முடிகின்றது.

மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் செயற்பாடுகள் மிக உயர்ந்த தரத்துடன் பராமரிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவது மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம்.

மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அவ்வாறு செயற்படாமல் இருப்பது வருத்ததிற்குரிய விடயமாகும்.

இந்த ஒழுங்குமுறையான செயல்முறை முற்றிலும் உடைந்துவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம்.”என கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...