பாதுக்க, சியம்பலாவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலுள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விடுதிக்கு விடுமுறையைக் கழிப்பதற்காக தனது ஒன்பது நண்பர்களுடன் வந்துள்ளார். இவர்கள் நீச்சல் குளத்தில் இருந்து மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் மாளிகாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வாடகை வண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#SriLankaNews