6 3
இலங்கைசெய்திகள்

வைத்தியர் அர்ச்சுனா எம்.பி தாக்கப்பட்டாரா..! வெளியான புதிய தகவல்

Share

வைத்தியர் அர்ச்சுனா எம்.பி தாக்கப்பட்டாரா..! வெளியான புதிய தகவல்

தன்னை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ள நிலையில் தாம் யாரையும் தாக்கவில்லை என கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா(Sujith Sanjaya Perera) தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே சஞ்சய் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் அவரைத் தாக்கியதாக அவர் கூறுவதை நான் முற்றிலும் மறுக்கிறேன் என்றார்.

இதன்போது எழுந்த குருநாகல் மாவட்ட உறுப்பினர் நளின் பண்டார(nalin bandara), யாழ்.மாட்ட சுயேச்சை உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு வந்து மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டார் என்றார்.

தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசாரிக்க சென்ற போது எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...