24 66265afceaedf
இலங்கைசெய்திகள்

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்பட்டாலும் ஏற்கத் தயாரில்லை

Share

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்பட்டாலும் ஏற்கத் தயாரில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தன்னிடம் வழங்கப்பட்டாலும் அதனைப் பொறுப்பேற்பதற்குத் தயாரில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ( Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நீண்ட காலம் அரசியல் செய்தவர்.

எனவே, சுதந்திரக் கட்சியில் அவர் போசகர் என்ற பதவி நிலையில் இருக்க வேண்டும். அந்தப் பதவியில் இருந்து தேவையான ஆலோசனைகளை வழங்கலாம்.

ஆனால், மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். அவரைப் பற்றி கருத்து வெளியிட்டு எனது நேரத்தை வீணடிக்கத் தயாரில்லை.

அதேவேளை, மே தினக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் செல்வதற்கு நான் தயாரில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் களனி தொகுதிக்கான அமைப்பாளர் என்ற வகையில் அந்தக் கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே பங்கேற்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...