download 22 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு நன்கொடையாக காணிகள்!

Share

வட மாகாணத்தில் காணி அற்ற, வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான  நடவடிக்கைகள் இறுதிக்  கட்டத்தை எட்டியுள்ளதாக வட மாகாண  ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,வடமாகாணத்தில் காணி அற்ற வறுமை நிலையில் வாழும் குடும்பங்களுக்கான  நன்கொடைக் காணிகள் வழங்கும் செயற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அதே போன்று  காணி அற்ற அரசஉத்தியோகத்தர்களுக்கும் குத்தகைக்கு மற்றும் வீடுகளை கட்டுவதற்கு காணிகள் வழங்கும் செயற் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
 மாகாணத்தில் சுமார் 4 இலட்சம்  மரங்கள் ஒவ்வொன்றிற்கும் 1:5 என்ற விகிதத்தில் மரங்களை நாட்டுவதற்கு புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்குவதற் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது வழங்கப்படும் காணி துண்டுகளில் ஏற்கனவே உள்ள பயன் தரும் மரங்கள் அல்லது காணி துண்டுகளில் நடுகை செய்யும் பயன்தரும் மரங்களுக்கான இலவச ஆலோசனைகளும்  பெற்றுக் கொடுக்கப்படும்
குறித்த திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மாகாண அமைச்சுக்களின் அதிகாரிகள் உள்ளூர் ஆட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச குழுக்கள் இணைந்து பணியாற்றுவதற்கான செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
 ஆகவே இதன் மூலம் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் 10 பேர்ச் அரச காணிக்கு உரிமையாளராக மாறுகின்ற நிலையில் அவர்களுக்கான பயன் தரும் மரங்களை அவர்களே அறுவடை செய்யும் உரிமம் வழங்கப்படும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...