சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய திட்டமொன்று செயல்படுத்தப்படவுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு விரைவாகச் செல்வதை உறுதி செய்ய, கட்டுநாயக்க, கொழும்பு மற்றும் ஏனைய பிராந்திய விமான நிலையங்களுக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

வெறும் இயற்கை அழகை மட்டும் நம்பியிருக்காமல், சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளைச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு விமான போக்குவரத்து பலப்படுத்தப்படுவதன் மூலம், தொலைதூர சுற்றுலாத் தலங்களும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அமைச்சர் நேற்று (10) கொக்கலையில் அமைந்துள்ள விமான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு நிலையத்திற்கு (MRO facility) விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்ட அவர், உயர்மட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சிவில் விமான போக்குவரத்துத் துறை நவீனமயமாக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். மேலும், ‘ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்’ போன்ற சர்வதேச பாதுகாப்பு நகர்வுகள் பிராந்திய வான்வெளியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நிலையில், உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் சிவில் போக்குவரத்து ஒருங்கிணைப்பு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.

 

 

Exit mobile version