டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!
இலங்கைசெய்திகள்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

Share

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

ஜூலை 28ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

எனினும், இது கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது குறைவான பெறுமதியாகவே உள்ளது.

கடந்த வாரத்தில் ஜப்பானிய யெனுக்கு எதிராக ரூபா 15.9 சதவீதமும், ஸ்ரேலிங் பவுண்டிற்கு எதிராக 3.8 சதவீதமும் அதிகமதிப்பு கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரம் பொருளாதாரத்தின் நடத்தை குறித்த மத்திய வங்கியின் அறிவிப்பின்படி, இந்திய ரூபாய்க்கு எதிராக ரூபாய் 9.4 சதவீதமும், யூரோ நாணய அலகுக்கு எதிராக 7 சதவீதமும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை ரூபாவின் நிலை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் கூறுகையில், இலங்கை ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்.

வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலரின் பெறுமதியை தீர்மானிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. சமீபகாலமாக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கத்திற்கு முற்றிலும் டொலர் பரிவர்த்தனையே காரணம்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன், ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...