கடுமையாக வீழ்ச்சியடைந்த டொலரின் பெறுமதி!

24 6614ce19cf6f9

கடுமையாக வீழ்ச்சியடைந்த டொலரின் பெறுமதி!

டொலரின் பெறுமதி 295 ரூபாய் வரை குறைந்திருந்தாலும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

சில அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் வரிச்சலுகை வழங்கிய போதிலும் அதன் பலன்கள் மக்களுக்குக் கிடைக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய பண்டிகைக் காலத்தில் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடைகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதி கடுமையாக குறைவடைந்திருந்தாலும் கூட அதன் பலன் மக்களைச் சென்றடைவில்லை.

தரமற்ற பொருட்களும் இன்றைய காலத்தில் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version