15 ரூபாவால் குறைகிறது டொலர்!

dollar

உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியாக 365 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விற்பனை விலையானது நேற்றைய தினம் 380 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 15 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய, டொலரொன்றின் விற்பனை பெறுமதி 377 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 364 ரூபா 22 சதமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

#SriLankaNews

Exit mobile version