யாழில் இனவழிப்பு ஆவணமாக்கல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது
மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புகள் தொடர்பான காட்சிகள் தொகுத்து ஆவணமாக்கப்பட்டு தியாக தீபம்
திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று முதல் ஆரம்பமாகின்ற நிலையில்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆவண வெளியீட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் இச் செயற்றிட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த நிகழ்வில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சியின்
உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், பொதுமக்களும் பார்வையிட்டு வருகின்றனர்.

IMG 20220512 WA0009

#SriLankaNews

 

Exit mobile version