சிசு வழக்கில் வைத்தியர்கள் சாட்சியம்!

download 16 1 6

சிசு வழக்கில் வைத்தியர்கள் சாட்சியம்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரசவத்தின் போது சிசு இறந்ததாக குறிப்பிடப்படும் சம்பவத்தில், நேற்றைய தினம் மருத்துவர்கள் இருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர்.

இளம் குடும்பப் பெண்ணொருவர் பிரசவத்திற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், சிசு உயிரிழந்த நிலையில் பிரசவமானது.

சிகிச்சையளிப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவினால் இந்த மரணம் நிகழ்ந்ததாக சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கையிட்டிருந்தார்.

பிரசவ வலியை ஏற்படுத்த ஊசி செலுத்திய பின்னர், தாய் முறையாக கண்காணிக்கப்படவில்லை என்றும், கர்ப்பப்பை பாதிப்படைந்து இரத்த ஓட்டமின்றி குழந்தை உயிரிழந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டனர்.

கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மரண விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்றைய தினம் பருத்தித்துறை வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவர்கள் இருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினர். பிரசவ விடுதியில் பணியாற்றிய தாதிய உத்தியோகத்தர்களும்  நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Exit mobile version