நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள் தொடர்பில் தகவல்

tamilni 488

இலங்கையில் மட்டும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச்செல்லவில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுனர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமையானது உலகம் முழுவதிலும் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்காவில் பெரும் எண்ணிக்கையிலான தாதியர்கள் நாட்டை வெளியேறி வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் கூறியுள்ளார்.

இந்த தாதியர்கள் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையானது சர்வதேச ரீதியிலான ஒன்று எனவும் இலங்கைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டது அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version