ரணிலின் பதவிப் பேராசைக்காக நாட்டு மக்களை பலி கொடுக்காதீர்! – அநுர கோரிக்கை

Anura Kumara Dissanayaka 1000x584 1

அரசாங்கத்துக்கு எவ்வாறான அடக்குமுறை தேவைகள் இருந்தாலும் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் எந்தவொரு உத்தரவுகளுக்கும் இராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படையினரும் செவிசாய்க்கக்கூடாது. மக்களின் பக்கம் முப்படையினர் நிற்க வேண்டும். என அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கண்ணீர்புகை, நீர்த்தாரைப் பிரயோகங்கள் உள்ளிட்ட தாக்குதலை மக்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டாம். அதுபோல உங்களது ஆயுதங்களையும் மக்கள் பக்கம் திருப்ப வேண்டாம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்கிற தனிமனிதரின் பதவிப் பேராசைக்காக நாட்டையும், நாட்டு மக்களையும் பலிகொடுக்க வேண்டாம்.

போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்த அரசாங்கம் முயல்கிறது. அவசரகாலச் சட்டம் அடக்குமுறைச் சட்டமாகும். அடக்குமுறைகளை மேற்கொள்ளவும் ஜனநாயக ரீதியற்றவகையில் செயற்படுவதற்கும் ரணில் தனக்குக் கிடைத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இதன்படியே மேல்மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு தீர்மானமிக்க இடத்துக்கு வந்துள்ளதால் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளவில்லை என்றால் நாட்டில் மோசமான நிலையொன்று ஏற்படும்.தயவுசெய்து மக்களின் குரலுக்கும், மக்களின் அபிலாசைகள், நோக்கங்களுக்கு செவிசாய்க்க வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Exit mobile version