மத்திய வங்கி ஆளுநர் விடயத்தில் தலையிடாதீர்! – ரணிலிடம் கோரிக்கை

ranil wickremesinghe 759fff

மத்திய வங்கி ஆளுநர் விடயத்தில் கையடிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், மொட்டு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவி காலம் இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

எனினும், அவருக்கு மேலும் ஒரு தவணை காலம் (6 வருடங்கள்) இடமளிக்க வேண்டும் என ஶ்ரீலங்கா பொது{ன பெரமுன உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பிரதமர் உடன்படவில்லை. மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு புதியவர் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திவருகின்றார்.

இந்நிலையிலேயே மொட்டு கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் இழுத்தடிப்பு செய்தால், அவரிடமிருந்து நிதி அமைச்சு பதவியை பறிக்க வேண்டும் என ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version