யாழில் எரிபொருள் விநியோகத்துக்காக பங்கீட்டு அட்டை அறிமுகம்!

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோகத்துக்காக எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் பங்கீட்டு அட்டை முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மக்கள் தமக்கான பதிவுகளை பிரதேச செயலகங்களில் மேற்கொண்டு எரிபொருள் அட்டையை பெற முடியும்.

அரச பணியாளர்கள் தமது திணைக்கள தலைவர் ஊடாக மாத்திரமே தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

அத்துடன் அத்தியாவசிய சேவைக்காக ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள ஒரு ப.நோ.கூ.ச (MPCS) நிரப்பு நிலையம் செயற்படும்.

இன்று (20.06.2022) இடம்பெற்ற யாழ் மக்களுக்கான எரிபொருள் விநியோகம், அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பான விசேட கலந்துரையாடலில் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன், பிரதேச செயலாளர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

288896494 701318261366038 5458907251135152998 n

#SriLankaNews

Exit mobile version