யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சிவாஜி கணேசன் குறித்த நூல் அறிமுக நிகழ்வில் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அவமரியாதை செய்து ஏற்பாட்டாளர்கள் வெளியேற்றிய சம்பவமொன்று இடம்பெற்றது.
நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நுாலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
ஊடகவியலாளர்களுக்கும் நிகழ்வி
ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் சென்றிருந்தனர்.
நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்ற நேரத்தில் அங்கு நின்ற ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த பெண்ணொருவர் ஊடகவியலாளர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் நீங்கள் ஊடகவியலாளர்களா, காணொளி எடுக்க வேண்டாம் நிகழ்வு மண்டபத்தை விட்டு வெளியேறுங்கள் என ஊடகவியலாளரிடம் கடும் தொனியில் ரகளையில் ஈடுபட்டார். இதன்போது ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த ஏனையவர்களும் மெளனமாக இருந்தனர்.
இந்நிலையில் அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரும் நிகழ்வு மண்டபத்தில் இருந்து வெளியேறினர்.
ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுத்து விட்டு ஏற்பாட்டாளர்களே நிகழ்வில் அவமரியாதை செய்தமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Leave a comment