25 68c93ffae28ac
இலங்கைஅரசியல்செய்திகள்

வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை: தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

Share

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்குத் தமது ஜனநாயகக் கடமையான வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பாகத் தேர்தல் ஆணைக்குழுவுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டமானது எதிர்வரும் தேர்தல்களில் ஒரு முன்னோடித் திட்டமாக முதலில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்பதற்கான நடைமுறைச் சிக்கல்கள் கண்டறியப்படும்.

இது தொடர்பாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவைத் தொடர்பு கொண்டு வினவியபோது, பிரதியமைச்சரின் இந்தக் கருத்தை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் வசித்து வரும் நிலையில், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில்.

தூதரகங்கள் வழியாக அல்லது இணையவழி (Online) ஊடாக வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படலாம். புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள் நாட்டின் அரசியல் தீர்மானங்களில் நேரடியாகப் பங்கேற்க முடியும்.

இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் குறித்துத் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...