யாழில் அனைத்து தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடல்! – பொதுவான குழு அமைக்கத் தீர்மானம்

என்.சிறிகாந்தா

அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்., இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலேயே 10 தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்டன.

இந்தக் கலந்துரையாடலில் சிவில் சமூக அமைப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் என்பன பங்குபற்றியிருந்தன.

அத்துடன் அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் பின்னர் அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான குழு ஒன்றை அமைத்து அதனூடாகச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version