நாட்டை முடக்குவதனால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது! – சுகாதார அமைச்சு

hemantha herath

நாட்டை முடக்குவதனால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது! – சுகாதார அமைச்சு

நாட்டை முடக்குவதனால் மட்டும் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது, இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டை முடக்குவதன் மூலம் மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும் முடக்கம் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வழியில் மாத்திரமே உதவும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சுகாதார நடைமுறைகளை மக்கள் பின்பற்றாவிடில் நாட்டை முடக்குவது அர்த்தமற்றதாகிவிடும் என்று குறிப்பிட்ட அவர், வீதிகளில் தற்போது பயணிக்கும் வாகனங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version