தினேஷ் குணவர்தன
இலங்கைசெய்திகள்

ஒழுக்கம் உள்ள நாடுகள் உலகில் முன்னேறிச் சென்றுள்ளன – பிரதமர் தினேஷ் குணவர்தன

Share

ஒழுக்கம் உள்ள நாடுகள் உலகில் முன்னேறிச் சென்றுள்ளன – பிரதமர் தினேஷ் குணவர்தன

பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் கல்வி முன் பயிற்சி பயிலுனர் காலத்தை பூர்த்தி செய்த அபிவிருத்தி உதவியாளர்களை அலுவலக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனங்கள் வழங்கல் மற்றும் ஒரு நாள் பயிற்சித் தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (30)உள்நாட்லுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது.

 

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,

 

பொது சேவை பல்வேறு சவால்களை கடந்து பயணிக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான வாய்ப்பை வழங்கினார். இன்று இந்தப் பணியில் எத்தனை பேர் எஞ்சியுள்ளனர்? அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் விலகிச் சென்றுவிட்டனர். வெற்றிக்கு பொறுமை தேவை என்பதை நீங்களும் நானும் சிறுவயதிலிருந்தே கற்றுக்கொண்டிருக்கிறோம். விட்டுச் சென்றவர்கள் அதைக் கற்றுக்கொள்ளவில்லை. பொறுமையுடன் வாழ்வில் எவ்வளவு வெற்றிகளை அடைய முடியும். இது வாழ்க்கைக்கு மட்டுமன்றி ஒரு நாட்டுக்கும் பொருந்தும். ஒழுக்கம் உள்ள நாடுகள் உலகில் முன்னேறிவிட்டன. உலகில் ஒழுக்கமான சமூகங்கள் முன்னேறியுள்ளன. ஒழுக்கம் இல்லாத ஒரு பிரதேசம், ஒரு சமூகம், நாடு குழப்பத்திலேயே வீழ்ந்து விடுகின்றது.

 

நாட்டுக்கு சேவை செய்வதற்கான முக்கிய சேவை அரச சேவையாகும். எனவே, அரச சேவையின் கௌரவம், ஒழுக்கம், நம்பிக்கைகள், இலக்குகளை அடைந்துகொள்ள அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும். அதைத்தான் ஒரு நாடாக நாம் எதிர்பார்க்கிறோம். நீங்கள் கடினமான ஒரு இடத்தில் வேலை செய்யலாம். மற்றும் நீங்கள் ஒரு வசதியான இடத்தில் வேலை செய்யலாம். நீங்கள் எங்கு வேலை செய்தாலும் பொறுப்புடன் அதை நிறைவேற்றுங்கள். பொறுப்பும் கடமையும் இருக்கும்போது முடிவுகளை எடுப்பதில் சவாலை எதிர்கொள்கிறீர்கள். உங்களது கல்வித் தகுதியின் அடிப்படையில் அரச சேவையில் இலகுவாக நுழைவதற்கு தடை இருந்தது. அதற்குப் பதிலாக, அரசு உருவாக்கிய தகுதிகளை ஆக்கப்பூர்வமாக உருவாக்கி, கல்வித் தகுதிகளை ஒத்த பயிற்சியாக மாற்றும் வாய்ப்பை ஏற்று பயிற்சி பெற்று மேலே செல்ல முடியும் என்ற நிலைக்கு வந்துள்ளது. சிலபேது இது முதல் அனுபவமாக இருக்கலாம். இந்த வழியில் உயர்ந்த நிலைக்கு செல்ல எமது பல்கலைக்கழக முறைமையில் தனியானதொரு பல்கலைக்கழகம் சேர்க்கப்பட்டுள்ளது. உயர்தரம் கற்கவில்லை என்பதற்காக பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வழியில்லை என்று நினைக்க வேண்டாம். இதன் மூலம் அரச சேவையில் தகுதியை உருவாக்கிக் கொண்டு முன்னேற முடியும் என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம்.

 

இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் இங்கு கருத்துரை வழங்கினர், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி. விஜேசிறி, பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே மற்றும் நியமனம் பெற்றவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...