தேர்தல் நடைபெற்றால் நிச்சயம் போட்டியிடுவேன்:திலித் ஜயவீர

tamilni 355

தேர்தல் நடைபெற்றால் நிச்சயம் போட்டியிடுவேன்:திலித் ஜயவீர

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயமாக போட்டியிடுவேன் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

மவ்பிம ஜனதா கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்சியானது வரலாற்று ரீதியான தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் கட்சி என அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இணைந்துக்கொண்ட ஓர் கட்சியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூர நோக்குடைய கொள்கைகளின் அடிப்படையில் தமது கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியை அடைய வேண்டும் என்ற தனிப்பட்ட நோக்கத்தில் தாம் செயற்படவில்லை என திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

Exit mobile version